Tamil Cinema News | சினிமா செய்திகள்
5 வருடத்திற்கு முன் வெளியான சூப்பர் ஹிட் பட ரீமேக்கில் நடிக்கும் திரிஷா.. அதுவும் சூப்பர் ஸ்டார் படம்!
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா.
வயது ஏறிக்கொண்டு போனாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் அப்படியேதான் உள்ளது. கதைக்கு தேவையான கவர்ச்சியில் இப்பவும் தாராளம் காட்டி வருவதால் அவருக்கு ரசிகர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை.
இந்நிலையில் ஐந்து வருடத்திற்கு முன் பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான படம் ஒன்றின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளாராம் திரிஷா.
2015ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்த திரைப்படம் பிக்கு. அமிதாப்பச்சன் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து நடித்திருந்த பிக்கு படம் பாக்ஸ் ஆபீசில் செம ஹிட் அடித்தது.
இந்நிலையில் பிக்கு படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். தீபிகா படுகோனே கதாபாத்திரத்தில் திரிஷாவும், அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் பிரபல முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

trisha-cinemapettai
ஏற்கனவே சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான பின்க் படத்தின் ரீமேக்கில் தல அஜித் நடித்ததை தொடர்ந்து, பிக்கு பட தமிழ் ரீமேக்கில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
