Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜோடி போட்ட நடிகருக்கு அக்காவாகும் த்ரிஷா.. அடப்பாவமே! தலையில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் பிரபல நாயகியாக கிட்டத்தட்ட 15 வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நிறைய படங்களில் ஜோடி போட்டு விட்டார்.
அதில் ஒருவர்தான் ஜெயம் ரவி. ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான உனக்கும் எனக்கும் பூலோகம் சகலகலா வல்லவன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியன் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.
ராஜராஜசோழன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெயம் ரவிக்கு அக்காவான குந்தவை வேடத்தில் நடிகை திரிஷா நடிக்க இருக்கிறார். இதனால் தன்னுடன் ஜோடி போட்ட நடிகருக்கே அக்காவாக நடிக்கும் நிலைமை வந்துவிட்டது என புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
இருந்தும் பொன்னியின் செல்வன் படத்தில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தருவதால் இந்த படத்தில் நடித்திருக்கிறேன் தன்னுடைய நெருங்கிய வட்டாரங்களிடம் கூறி சமாளித்து வருகிறாராம்.
