Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்னை அறிந்தால் படத்தில் முதலில் த்ரிஷா இல்லையாம்.. இந்த நடிகைதானாம்.. வாய்ப்பை கோட்டை விட்டு வருந்திய நடிகை
தல அஜித், அனுஷ்கா முதன்முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய திரைப்படம் என்னை அறிந்தால். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு போதுமான அளவு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.
இந்த படத்தின் மூலம்தான் அருண் விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடம் கிடைத்தது என அவரே பல மேடைகளில் கூறியுள்ளது அனைவரும் அறிந்ததே. அந்த விக்டர் கதாபாத்திரம் இன்னும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தல அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் த்ரிஷாவுக்கு பதிலாக முதன் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் நடிகை பார்வதி நாயர்.

parvathy-nair
சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த உண்மையை அவர் கூறியிருந்தார். அதே என்னைஅறிந்தால் படத்தில் அருண்விஜய் ஜோடியாக பார்வதி நாயர் நடித்திருந்தார் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இருந்தாலும் தல அஜித்துக்கு ஜோடியாக நடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டுவிட்டேன் என தற்போதும் வருந்துவதாக கூறியுள்ளார்.
அப்பொழுது மட்டும் தல அஜித்துக்கு ஜோடியாக நடித்து இருந்தால் தற்போது நான் முன்னணி நாயகியாக வலம் வந்து இருப்பேன் எனவும், அறியாமையால் வாய்ப்பை இழந்து தற்போது பட வாய்ப்புகளுக்கு அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது எனவும் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
குழாயில் தண்ணீர் வரும்போதே குடத்தை வெச்சிடனும் பேபி!
