fbpx
Connect with us

Cinemapettai

37 வயதில் மீண்டும் 18 வயது போல் கிளாமரில் அலற விடப் போகும் திரிஷா.. படையெடுக்கும் தயாரிப்பாளர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

37 வயதில் மீண்டும் 18 வயது போல் கிளாமரில் அலற விடப் போகும் திரிஷா.. படையெடுக்கும் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் த்ரிஷா. ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், அதற்கு பின்னர் முன்னணி ஹீரோக்களை ஆச்சரியப்படும் அளவிற்கு விஸ்வரூப வளர்ச்சி பெற்றார்.

அவர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் மௌனம் பேசியதே, சாமி, கில்லி, ஆறு, அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, 96 என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

சினிமா மேல் உள்ள மோகத்தினால் தற்போதுவரை திருமணத்தைப் பற்றி கூட யோசிக்காமல் நிறைய சாதிக்க வேண்டும் என்று திறைமையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட 5 படங்கள் நடித்துள்ளாராம்.

அதில் இரண்டு வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் 3 தமிழ் படங்கள் நடித்துக் கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பரமபத விளையாட்டு, கர்ஜனை, ராங்கி, சுகர், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவில் சில வருடங்களாக இடைவெளி இருந்தாலும், தற்போது விஸ்வரூப வளர்ச்சியை கண்டு முன்னணி நடிகைகள் பயத்தில் உள்ளனர். தமிழ் சினிமாவை தவிர மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ஆக்சன் மட்டும் திரில்லர் கலந்த ‘ராம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது திரிஷாவின் படத்தை கண்டு கோலிவுட் வட்டாரமே வாயடைத்துப் போய் உள்ளனர். சினிமாவில் வாய்ப்பு உள்ளவரை தனக்குத் திருமணம் இல்லை என்றும் அதுவரை சினிமாவை காதலிக்கிறேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பார்.

Continue Reading
To Top