தென்னிந்திய நடிகைகளில் தனக்கென தனியொரு இடத்தைப் பிடித்திருக்கும் திரிஷா தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். திரிஷா பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். சினிமாவுக்கு நடிக்க வந்து 18 ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருந்து வரும் இவருக்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

trisha

சமீபத்தில் தான் இவருக்கு யூனிசெப்பின் நல்லெண்ண தூதர் என்ற கவுரவம் வழங்கப்பட்டது.  இவர்  தமிழ்நாடு, மற்றும்  கேரளாவுக்கான நல்லெண்ண தூதர்.

இந்த நிலையில்  காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடநெமிலி கிராமத்தில் யூனிசெப் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கழிவறை கட்டும் நிகழ்ச்சியில் திரிஷா கலந்துகொண்டார். கழிவறைகள் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார் திரிஷா.

trisha

அப்பொழுது  அவர் பேசியது: “கழிவறைகள் பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க  முடியும்.  கழிவறை பயன்படுத்துவது பெண்களின் பாதுகாப்புக்கும், மரியாதைக்கும் அவசியமானது” என்று கூறினார்.