மென்மையான கதாநாயகி நடிகை திரிஷா, தனுசுடன் நடித்த கொடி படத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிரடியான நெகட்டீவ் ரோலில் நடித்திருந்தார். அதோடு அந்த வேடத்தால் நல்ல பெயர் எடுத்திருந்தார் அடுத்தபடியாக திரிஷாவுக்கு அதிரடி வேடங்களாக கிடைத்தன.

ஏமாறுபவர்களுக்கு தண்டனை அவர்கள் இழக்கும் பொருள். ஏமாற்றுபவர்களுக்கு தண்டனை தனிமையும், நிம்மதியற்ற வாழ்க்கையும் என்கிற சித்தாந்தத்தோடு 2014ம் ஆண்டு வெளியான படம் சதுரங்கவேட்டை. ஹெச் வினோத் குமார் இயக்கத்தில் நட்டி நடராஜன் , இஷாரா நாயர் நடித்த சதுரங்கவேட்டை மாபெரும் வெற்றியடைந்தது.

இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கி இருக்கிறார். நடிகர் மனோபாலா தயாரித்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய ஹெச்.வினோத் கதை அமைத்துள்ளார். அரவிந்த் சாமி திரிஷா நடித்துள்ள இந்தப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

அதிகம் படித்தவை:  திரிஷா தலைவர் மு.கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். புகைப்படம் உள்ளே!

மேலும், நாயகி படத்தை அடுத்து இப்போது சதுரங்கவேட்டை-2, கர்ஜனை படங்களில் அதிரடியான நாயகியாக உருவெடுத்துள்ளார் திரிஷா. இதில் சதுரங்கவேட்டை-2 படத்தில் அரவிந்த் சாமியுடன் எதிரும் புதிருமான ரோலில் நடித்துள்ளார்.

நடிகை திரிஷாவின் நிலையை பாருங்களே..! திருடி மாட்டிக்கொண்டாராம்..!

கதைப்படி திருடியாக நடித்துள்ள திரிஷா, இதுரையில்லாத அளவுக்கு அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். அதனால், கொடி படத்தைப்போலவே இந்த படத்திலும் திரிஷாவின் நடிப்பு ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும் விதமாக இருக்கும் என்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  இறுதிவரை நிறைவேறாத த்ரிஷாவின் ஆசை

நடிகை திரிஷா சமிபத்தில் நடித்துவரும் படங்கள் அனைத்தும் வில்லி கேரக்ட்டராக அமைகிறது கொடி படமும் திரிஷா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்த்தது அனைவருக்கும் தெரியும்.

அதே போல் சதுரங்கவேட்டை-2 படத்திலும் அதிரடி வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார் போல சதுரங்கவேட்டை முதல் பாகமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது இரண்டாம் பாகம் அதுவும் திரிஷா நடித்து வருகிறார் சொல்லவா வேணும் பொறுத்திருந்து பார்ப்போம்.