Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்ரனுக்கு தோழியாக நடிக்க திரிஷா வாங்கிய முதல் சம்பளம்.. ஆனால் அது இப்போ அவங்க கொடுக்கிற டிப்ஸ்!
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை திரிஷா, தனது சினிமா வாழ்க்கையை சாதாரண துணை நடிகையாக ஆரம்பித்து இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.
37 வயதான த்ரிஷா இன்று வரை ஹீரோயின் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருவதற்கு காரணம் என்னவென்றால் இளமை கொஞ்சம் கூட மங்காமல் அப்படியே மெயின்டெயின் செய்து வருவதுதான்.
சினிமாவில் கதாநாயகியாக காலூன்றி நிற்க, திருமணம் கூட தடையாக நிற்கக்கூடாது என்பதற்காகவே இன்றுவரை கல்யாணம் செய்யாமலே வாழ்ந்து வருகிறார்.
1999ஆம் ஆண்டு பிரஷாந்த்,சிம்ரன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘ஜோடி’ படத்தில் சிம்ரனுக்கு தோழியாக திரிஷா தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.
இந்தப் படத்தில் த்ரிஷாவிற்கு சம்பளம் வெறும் 500 ரூபாய் மட்டுமே, மனம் தளராத திரிஷாவின் தொடர் முயற்சியினால், அடுத்த சில வருடங்களிலேயே முன்னணி கதாநாயகனான சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து ‘மௌனம் பேசியதே’ என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அவருடைய அட்டகாச நடிப்பினால் விஜய், விக்ரம், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.
அப்போ 500 ரூபாய் வாங்கிய த்ரிஷா தற்போது 1.5 கோடி ரூபாய் வாங்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் த்ரிஷாவின் படிப்படியான முன்னேற்றத்தை ரசிகர்கள் தங்கள் வாழ்க்கைக்கு முன் மாதிரியாக எடுத்துக்கொள்கின்றனர்.
மேலும் அவருடைய தொடக்ககால சம்பளத்தை அறிந்த ரசிகர்கள் சமூக வலை தளங்களின் வாயிலாக திரிஷாவை புகழ்ந்து தள்ளுகின்றனர்.
