தற்போது வளர்ந்து வரும் நாயகன்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைந்து வருகின்றன. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ரஜினி முருகன்’ வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியிருக்கிறார்.

அதிகம் படித்தவை:  ரெமோ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்நிலையில், திரிஷா சிவகார்த்திகேயனுடன் நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார். திரிஷா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘அரண்மனை 2’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளதை முன்னிட்டு ரசிகர்களுடன் டுவிட்டரில் லைவ்சாட் நடத்தினார்.

அப்போது ரசிகர் ஒருவர், ‘நீங்கள் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதே, எதனால்? என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த திரிஷா, ‘இந்த செய்தியில் உண்மையில்லை. சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற தயார்’ என்று கூறியுள்ளார். இதனை அறிந்த சிவகார்த்திகேயன் திரிஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.