nayaki-trishaநாயகி படம் குறித்து த்ரிஷா கூறுகையில்,

நாயகி எனக்கு முக்கியமான படம். இதற்கு முன்பு நான் நடித்த படங்களில் ஹீரோக்களை சுற்றித்தான் கதை இருந்தது. ஆனால் இந்த படத்தில் என்னை சுற்றி கதை உள்ளது. அந்தவகையில்தான் நான்தான் இந்த படத்தின் ஹீரோ. இந்த படம் ஹாரர் கதையில் உருவாகியிருக்கிறது. இதில் நான் முதன்முறையாக காமெடி காட்சிகளிலும் அதிகமாக நடித்திருக்கிறேன். நான் எதிர்பார்த்ததை விடவும் காமெடி நன்றாக ஒர்க்அவுட்டாகியிருக்கிறது.

அதிகம் படித்தவை:  விஜயசாந்தி போல் பெயர் வாங்க த்ரிஷாவுக்கு ஆசை!

மேலும், இந்த நாயகி படத்தில் நான் இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாக செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் நான் சிங்கிள் ரோலில்தான் நடித்திருக்கிறேன். இந்த படம் மார்ச் மாதம் திரைக்கு வந்த பிறகு என்னை கதையின் நாயகியாக வைத்து படம் பண்ண பல தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்கிறார் த்ரிஷா.