96

96

தஞ்சையில் ஸ்கூலிங் முடித்த ஒரே பாட்ச்சை சேர்ந்தவர்கள் 2016 இல் சென்னையில் கெட்- டுகெதர் வைப்பது தான் கதைக்களம். 22 வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் இருவருக்குள் நடக்கும் அன்பு பரிமாற்றம், பாசம், மீண்டும் துளிர்க்கும் காதல், அக்கறை என எமோஷன்களின் உச்சத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்திருந்தனர். தமிழகத்தில் ராம் மற்றும் ஜானு இன்று செல்லப்பெயர் ஆகிவிட்டது.

9696

இந்நிலையில் இப்படத்தினை தீபாவளி சிறப்பு திரைப்படமாக சன் டிவி திரையிட உள்ளது. இதனை பற்றியே திரிஷா ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

“படம் ரிலீஸாகி 5-வது வாரத்திலும் திரையரங்குகளில் சுமார் 80 % கூட்டத்துடன் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு சீக்கிரமாக டிவியில் ஒளிபரப்புவது நியாயமில்லை என்று படக்குழுவான எங்களுக்கு தோன்றுகிறது. ஆகையால், படத்தை பொங்கல் சமயத்திற்கு மாற்றுங்கள் என்பதே எங்கள் கோரிக்கை. நன்றிகளுடன்.” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

த்ரிஷாவின் இந்த வேண்டுகோளுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.