Connect with us
Cinemapettai

Cinemapettai

trisha

Videos | வீடியோக்கள்

என்ன ம** புடுங்குற மைண்ட்.. எதிர்பார்ப்பை அதிகரிக்கும் திரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’.. ஸ்னீக் பீக் வீடியோ

திருஞானம் இயக்கத்தில் வரும் 28ஆம் தேதி வெளிவர காத்துக்கொண்டிருக்கும் பரமபத விளையாட்டின் சனிக் பிக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் த்ரிஷா, நந்தா, வேலு ராமமூர்த்தி, ரிச்சர்ட் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் வீடியோவை பார்க்கும் போது உண்மை சம்பவத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சி.சி.டி.வி கேமராக்கள்  இல்லை என்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதேபோல் இதில் ஒரு அரசியல் தலைவர் சிசிடிவி கேமராவை மருத்துவமனையிலிருந்து எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார். அதற்கு திரிஷா நான் உங்க கட்சி தொண்டன் இல்லை என்று வசனங்களில் தெறிக்க விடும் காட்சிகள்  நிஜக் கதையை கண்முன் நிறுத்துகிறது.

இந்தப் படத்திலும் காட்சிகள் அமைக்கப்பட்டு திரிஷாவின் ஆக்ரோஷமான வசனங்கள் படத்தை பார்ப்பதற்கான ஆர்வத்தை அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

இந்த படம் வரும் வெள்ளி கிழமை பிப்ரவரி 28ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கின்றது. த்ரிஷாவின் 60வது படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top