Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் இவரை தான் திருமணம் செய்து கொள்வேன்.. ஓப்பனாக சொன்ன திரிஷா
நடிகர்களுக்கு வயதானால் யாரும் அதைப்பற்றி கவலை கொள்வதில்லை. ஆனால் நடிகைகளுக்கு குறிப்பிட்ட வயதை தாண்டிவிட்டால் எப்போது திருமணம் என்ற கேள்வி அவர்களைச் சுற்றி வட்டமிடும்.
அதுவே ஒரு சில நேரத்தில் அந்த நடிகைகளை தேவையில்லாமல் டென்ஷனாக்கி பொது இடங்களில் ஏதாவது அசம்பாவிதம் செய்ய வைத்துவிடும்.
அதை வைத்து நியூஸ் சேனல்கள் நடிகைகள் கோபத்தில் செய்ததை திரும்பத் திரும்பப் போட்டுக் காட்டி அவர்களின் கேரியரை காலி செய்துவிடுவார்கள்.
தற்போது 37 வயதான திரிஷாவும் அந்த பிரச்சனையில் மாட்டிக் கொண்டு தவித்து வருகிறார். ஏற்கனவே பிரபல தெலுங்கு நடிகர் ராணாவுடன் திரிஷா கிசுகிசுக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
ராணாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் அடுத்ததாக திரிஷாவுக்கு எப்போது என்ற கேள்வி அவரை சுற்றிக் கொண்டிருக்கிறது.
திரிஷா, தன்னை முழுமையாக புரிந்து கொள்ளும் ஒருவருக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும், அப்படி ஒருவர் கிடைக்கும் போது நானே திருமணம் செய்து கொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

trisha-cinemapettai-01
மேலும் அதுவரை சிங்கிளாக இருப்பதில் எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை என தெரிவித்துள்ளார். இப்படி தன்னுடைய திருமண விஷயத்தில் முழு உண்மையையும் திரிஷா சொல்வது இதுவே முதல்முறை.
