த்ரிஷா தன்னுடைய அம்மாவுடன் விடுமுறைக்கு கிளம்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா தன்னுடைய அம்மாவுடன் விடுமுறைக்கு கிளம்பியுள்ளார். இது குறித்து த்ரிஷா கூறுகையில், விடுமுறை நாள் தொடங்கியது. வசந்தம் இங்கே இருக்கிறது. பிரபஞ்சத்தில் எனக்கு பிடித்த இடம் இது என்று த்ரிஷா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

திகில் நிறைந்த படமான மோகினி, அனுஷ்கா சர்மா நடிப்பில் வந்த என்.எச்10 படத்தை மையமாகக் கொண்ட கர்ஜனை மற்றும் சதுரங்கவேட்டையின் இரண்டாம் பாகம் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று நடிகை த்ரிஷா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.