பட்டாசை கிளப்பும் திகில் வெப் தொடர்.. சைலன்டான சம்பவத்தால் த்ரிஷா பிடித்த தெலுங்கு மார்க்கெட்

த்ரிஷா நானும் லேடி சூப்பர் ஸ்டார் தான் என போர்க்கொடி பிடித்து வருகிறார். 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டுக்கு பங்கம் ஏற்படாமல் பாதுகாத்து வருகிறார். இன்று வரை தன்னுடைய அழகு குறையாமல் ஹீரோயினாக உச்ச நடிகர்களுடன் ஜோடி போடுகிறார்.

இவரைப் பற்றி சமீபத்தில் ஏகப்பட்ட வதந்திகள். விஜய்க்கும் இவருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. விஜய் வாங்கிய அபார்ட்மெண்டில் இவரும் வீடு வாங்கியிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் விஜய் வாங்கிய அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கிய நடிகை சாய் பல்லவி.

சாய் பல்லவி தவிர அந்த அபார்ட்மெண்டில் நடிகர் ஆர்யா, மற்றும் பிரகாஷ்ராஜ் வீடு வாங்கியுள்ளனர் நடிகை திரிஷா இப்பொழுது 8 முதல் 10 கோடிகள் சம்பளம் வாங்குகிறார். எல்லா மொழிகளிலும் நடித்து வருவதால் இவரது கால் சீட் கிடைப்பது மிகவும் சிரமம்.

சைலன்டான சம்பவத்தால் த்ரிஷா பிடித்த தெலுங்கு மார்க்கெட்

விடா முயற்சி, தக்லைப் என பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கிறார். இதுவும் போக சமீபத்தில் இவர் நடித்த பெப் தொடர் சக்கை போடு போட்டு வருகிறது. சோனி லைவ்வில் வெளி வந்திருக்கும் “பிருந்தா” வெப் தொடர் 8 எபிசோடுகளை கொண்டுள்ளது. இதுதான் சமீபத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளது.

கிராமத்தில் நடைபெறும் நரபலி சம்பந்தமான திகில் ஊட்டும் கதை. இந்த வெப் தொடரில் திரிஷா, பிருந்தா கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இது எல்லா மொழிகளிலும் பார்க்குமாறு ரிலீசாகி உள்ளது. இந்த தொடர் சைலன்டாக வந்து திரிஷாவுக்கு மிகப்பெரிய பெயரை சம்பாதித்துள்ளது. இப்பொழுது தெலுங்கிலும் அடுத்தடுத்து பல படங்கள் த்ரிஷாவிற்கு குவிந்து வருகிறது.

Next Story

- Advertisement -