தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ஹீரோயினாக நடித்து வருபவர் த்ரிஷா. இன்று முன்னணியில் இருக்கும் அனைத்து ஹீரோக்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இல்லாமல் மற்ற மொழிகளிலும் திரிஷாவின் ராஜ்ஜியம் சில வருடங்கள் இருந்தது.
சமீபகாலமாக திரிஷா முன்னைவிட மிகவும் அமைதியாக மாறி விட்டாராம். அதுவும் திரிஷாவின் முன்னாள் காதலர் என அனைவராலும் அழைக்கப்பட்ட ராணாவின் திருமணத்திற்கு பிறகு திரிஷாவின் நடவடிக்கைகளில் பல மாற்றங்களாம்.
முன்னடிபோல யாரிடமும் அவ்வளவு எளிதாக பழகுவது இல்லையாம். மேலும் ஊரடங்குடன் சேர்த்து கிட்டத்தட்ட பல மாதங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டாராம் த்ரிஷா. சரி இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத் சென்றுள்ளார் த்ரிஷா. ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து வெளியான திரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பார்ப்பதற்கு முன்பை விட இளமையாக மாறி செம ஸ்டைலிஸாக உள்ளார் திரிஷா. இதனால் திரிஷா வெறியர்கள் சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படங்களை வைரல் செய்து வருகின்றனர்.
திரிஷா நடிப்பில் அடுத்தடுத்த பரமபதம் விளையாட்டு, கர்ஜனை போன்ற படங்கள் வெளியாக உள்ளன. அனைத்துமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.