Tamil Cinema News | சினிமா செய்திகள்
7 வருடத்திற்கு பிறகு பிரபல முன்னணி நடிகருடன் ஜோடி போடும் த்ரிஷா.. கதை கூட கேட்கலயாம்!
முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த திரிஷா தற்போது தன்னுடைய பழைய ஹீரோவுடன் களமிறங்க உள்ளாராம்.
கமர்சியல் படங்களிலிருந்து சற்று விலகி கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார் த்ரிஷா.
இந்நிலையில் அடுத்ததாக திரிஷா நடிப்பில் கர்ஜனை, பரமபதம் விளையாட்டு போன்ற படங்கள் தொடர்ந்து வெளியாக ரெடியாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஏழு வருடங்களுக்கு பிறகு பல கமர்ஷியல் நடிகருடன் த்ரிஷா ஜோடி சேர உள்ளது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2013ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் சமர். விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற சமர் படம் வியாபார ரீதியாக தோல்வியை சந்தித்தது.
அந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் விஷால் நடிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம் திரிஷா.
அந்த படத்தில் நாய்க்கு முக்கிய வேடம் இருப்பதால் திரிஷா கதையை கூட கேட்காமல் நாய்கள் மீதுள்ள அன்பால் ஒத்துக் கொண்டாராம்.

trisha-vishal-cinemapettai
