த்ரிஷா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது ‘மோகினி’, ‘கர்ஜனை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ‘கர்ஜனை’ படம் வட இந்தியாவில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை சுந்தர் பாலு என்பவர் இயக்கி வருகிறார். அமித் பார்கவ் என்பவர் இப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். சிவகங்கை அருகே நேமத்தம்பட்டியில் இப்படத்தின் படப்பிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. த்ரிஷா பீட்டா அமைப்பை வளர்த்து விடுவதாகக் கூறி நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் கர்ஜனை படத்தின் படப்பிடிப்பை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

த்ரிஷா பீட்டா அமைப்பின் தூதராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரிஷா, ஆதரவற்ற தெரு நாய்களுக்கு தனது வீட்டில் இடம் கொடுத்து அதை பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.