Tamil Cinema News | சினிமா செய்திகள்
பெண்களுக்கு ரொம்ப பிடித்த விஷயத்தை வெறுக்கும் த்ரிஷா..!
Published on
நடிகை த்ரிஷா பெண்களுக்கு ரொம்ப பிடித்த விஷயத்தை வெறுக்கிறார் என்ற தகவல்கள் ரசிகர்ளுக்கு ஷாக் அடித்து இருக்கிறது.

trisha
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் நாயகியாகவே வெற்றி கண்டு லைம் லைட்டிலே இருப்பவர் த்ரிஷா. 20களின் தொடக்கத்தில் சினிமாவிற்கு வந்தவர் இன்றும் பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். 2001ல் நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் ப்யூட்டிஃபுல் ஸ்மைல் விருதை தட்டிச் சென்றார். அப்போது, ஒரு பேட்டியில் சினிமாவில் எல்லாம் நான் நடிக்க மாட்டேன் என ஸ்டேட்மெண்ட் விட்டார். ஆனால், அப்படியே பொய் ஆனது. அடுத்த வருடமே இயக்குநர் பிரியதர்ஷன் தனது லேசா லேசா படத்தின் நடிகையாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தார். அதை தொடர்ந்து, அவரின் கேரியர் கிராப் ஏற்றம் மட்டுமே கண்டது.
அனுஷ்கா, நயன்தாரா என நாயகி முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வெற்றி கண்டு வரும் நிலையில், கமர்ஷியல் நாயகியாக வெற்றி பெற்றவர் த்ரிஷா. விஜயுடன் இவர் நடித்த படங்கள் என்றால் கண்டிப்பாக வெற்றி தான் என கோலிவுட்டில் அச்சிடப்படாத விதியே உருவாகியது. குடும்ப கதை, கிராமத்து கதை என நடித்த வந்த த்ரிஷாவின் கிரேஸை ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் தான் எகிறடித்தது. தற்போது, த்ரிஷா ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2′, ’96’, ‘மோகினி’ என தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

trisha
இந்நிலையில், #askT என்ற ஹேஷ்டேக்கில் த்ரிஷா தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இதில் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், ரசிகை ஒருவர் த்ரிஷாவிடம் உணவுகள் பிடிக்குமா? ஷாப்பிங் பிடிக்குமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு த்ரிஷா தனது ஷாப்பிங் பிடிக்காது என டுவீட் தட்டினார்.
கணவர்களை மணிக்கணக்கில் துணிக்கடைக்கு அருகில் காக்க வைக்கும் மனைவிமார்கள் மத்தியில் த்ரிஷா கொஞ்சம் வித்தியாசம் தான் டுவிட்டரில் பேச்சாக இருக்கிறது.
