fbpx
Connect with us

Cinemapettai

சிறுவயது உடை அணிந்து புகைப்படம் வெளியிட்ட திரிஷா.. தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிறுவயது உடை அணிந்து புகைப்படம் வெளியிட்ட திரிஷா.. தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்

நடிகை திரிஷா கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்னமும் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை.

ஒரு கட்டத்தில் கமர்சியல் நடிகையாக வலம் வந்த திரிஷா தற்போது கதையின் நாயகியாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து கர்ஜனை, பரமபத விளையாட்டு, ராங்கி போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

சமீபகாலமாக திரிஷாவின் நடவடிக்கைகள் அனைத்துமே ரசிகர்களுக்கு புதிர் போடும் விதமாக அமைந்துள்ளது. தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாக தகவல் வெளியானது.

ராணா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதை அடுத்து திடீரென சமூக வலைதளங்களில் இருந்து ஒரு மாதம் ஓய்வு எடுத்து போவதாக அறிவித்தார்.

ஆனால் இருவருக்குள்ளும் நட்பு மட்டும்தான் இருக்கிறது என தற்போது வரை கூறி வருகிறார் திரிஷா. இந்நிலையில் தன்னுடைய சிறுவயது நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார் திரிஷா.

அந்த வகையில் தன்னுடைய சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தேவதை முகம், பேய் கனவுகள் என்பதைப்போல வாசகம் பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல் வைரலாகி வருகிறது.

trisha-childwood

trisha-childwood

Continue Reading
To Top