இது அரசியல் சம்பந்தமான செய்தி இல்லை, சமூக நலன் சம்பந்தப்பட்ட செய்தி தான். யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக நடிகை திரிஷா நியமிக்கப்பட்டுள்ளார். யுனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக தென்னிந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திரை நட்சத்திரம் திரிஷா.

#Trisha

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

தென்னிந்திய நடிகைகளில் தனக்கென தனியொரு இடத்தைப் பிடித்திருக்கும் திரிஷா தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். திரிஷா பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். சினிமாவுக்கு நடிக்க வந்து 18 ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருந்து வரும் இவருக்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பு யுனிசெப். இதன் தமிழ்நாடு, கேரளாவுக்கான நல்லெண்ண தூதராக திரிஷா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. இதன் மூலம் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், அவர்களுக்கு எதிராக நிகழும் வன்முறை ஆகியவற்றை  தடுக்கும் விதமாக திரிஷா குரல் கொடுக்கவுள்ளார்.

அதிகம் படித்தவை:  வாட்ஸ்அப் - யில் அனுப்பிய ஒரு வார்த்தையால் திசை மாறிப்போன 6 அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கை!!

தூதராக பொறுப்பேற்ற பின் திரிஷா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

யுனிசெஃப் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டதை கெளரவமாக உணர்கிறேன். குழந்தைகள் பாதுகாப்பு, அவர்களின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து பற்றி விழப்புணர்வை தமிழகம், கேரளாவில் ஏற்படுத்துவேன்.அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை கொண்டுசேர்த்து ஊட்டச்சத்தின்மை இல்லாத மாநிலமாக மாற்ற முயற்சி மேற்கொள்வேன். இதற்காக தமிழ்நாடு கேரளாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வேன்.

பெண் குழந்தைகள் 18 வயது வரை பள்ளிக்குச் சென்றால் அவர்களை குழந்தைத் திருமணம் , குழந்தைத் தொழிலாளர் போன்றவற்றிலிருந்து காப்பாற்ற முடியும் .

குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தீய தொடுதல் பற்றி அவர்களுக்கு கற்றுத் தரவேண்டும். பள்ளிகளில் பாலியல் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். பள்ளிகளில் புத்தக படிப்போடு வாழ்க்கையை எதிர்கொள்ளவும் கற்றுத் தரவேண்டும். எல்லா பள்ளிகளிலும் கட்டாயம் நூலகம் இருக்க வேண்டும்.

அதிகம் படித்தவை:  சச்சின் ட்ரைலர் 10 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை!

திரைப்படங்களில் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் காதலிப்பதை பற்றி விமர்சிக்கிறார்கள். அதை ஒரு சினிமா கதையாகத்தான் பார்க்க வேண்டும். அந்த காட்சிக்கு படத்தில் என்ன தேவை இருக்கிறது என்று பார்க்க ேவண்டும். அந்த வயதினருக்கே உரிய பாலின ஈர்ப்பாகத்தான் அவை காட்டப்படுகிறது.

பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச் செயல்களை தடுக்க ஆண் குழந்தைகளுக்கு சமூகப் பொறுப்புணர்வுகளை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என நடிகை த்ரிஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

Uma Krishnan. Trisha’s mother Instagram Post

யுனிசெப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கான தலைவர் ஜோப் சக்காரியா, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் எம்.பி.நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பல செலிபிரிட்டிகள் சமூகவலைத்தளங்களில் நடிகை த்ரிஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.