trisha-kodi-movieகோலிவுட் திரையுலகில் பல நடிகைகள் அரசியலில் குதித்து புகழ் பெற்று வரும் நிலையில் தற்போது புதியதாக நடிகை த்ரிஷாவும் அரசியலில் குதித்துள்ளார். ஆனால் த்ரிஷா குதித்தது நிஜ அரசியலில் அல்ல என்பதும் அவர் நடித்து வரும் அடுத்த படமான ‘கொடி’ படத்தில் அவர் அரசியல்வாதியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  இயக்குனரை அசர வைத்த தனுஷ்

காக்கி சட்டை, எதிர்நீச்சல் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்கி வரும் அடுத்த படம் ‘கொடி’. அண்ணன், தம்பி என இரண்டு வித்தியாசமான வேடங்களில் தனுஷ் நடித்து வரும் இந்த படத்தின் நாயகிகளாக த்ரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  Rail Movie Working Stills

இந்நிலையில் இந்த படத்தில் த்ரிஷா, ‘ருத்ரா’ என்ற அரசியல்வாதியாக நடித்து வருகிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று ‘கொடி’ படத்தின் ஸ்டில் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷும் அரசியல்வாதியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.