fbpx
Connect with us

Cinemapettai

சொத்துக்குவிப்பு வழக்கு! விரைவில் த்ரிஷா கைதாகிறாரா ?

News | செய்திகள்

சொத்துக்குவிப்பு வழக்கு! விரைவில் த்ரிஷா கைதாகிறாரா ?

நடிகை திரிஷா சென்னை ஆழ்வார் பேட்டையில் தனது அம்மா உமா உடன் வசித்து வருகிறார். கடந்த 2010-11ம் ஆண்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், தனது வருமானம் ரூ. 89 லட்சம் மட்டுமே என்று கணக்கு காண்பித்து புதிய படங்களில் வாங்கிய அட்வான்ஸ் தொகை  ரூ.5 கோடியை மறைத்ததாகவும் வந்த புகாரை அடுத்து நடிகை திரிஷா வீட்டில் வருமானவரி துறை அதிரடி சோதனை நடத்தி அவரிடம் இருந்து 1 கோடி 11 லட்சம் அபாரதம் வசூலித்தது.

இதனை ரத்து செய்ய வருமான வரித்துறையின் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் திரிஷா வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து மேல் முறையீட்டு தீர்ப்பாயம்  அதிரடியாக திரிஷாவின் அபாரத்தை  ரத்து செய்தது.

இது தொடர்பாக வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திர பேனர்ஜி வருமானவரி துறை தொடர்ந்த வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

இந்த வழக்கில் திரிஷா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அவருக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனவும் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top