நடிகை த்ரிஷா மீண்டும் ஒரு ஹாரர் படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகை த்ரிஷா, தனுஷுடன் நடித்த ‘கொடி’ படத்திற்கு பிறகு ‘சதுரங்கவேட்டை-2’, ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘96’ என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் ‘சதுரங்கவேட்டை -2’, ‘கர்ஜனை’ படங்களில் ஆக்ஷனில் இறங்கி நடித்துள்ளார் திரிஷா. மாதேஷ் இயக்கத்தில் ‘மோகினி’ படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். ‘அரண்மனை-2’, ‘நாயகி’ படங்களைத் தொடர்ந்து தற்போது புதிய திகில் கதையில் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

கதைப்படி சமையல்கலை வல்லுனரான த்ரிஷா, வெளிநாட்டுக்கு சமையல் ஸ்பெசலிஸ்டாக செல்கிறார். அங்கே போன இடத்தில் இன்னொரு திரிஷாவை சந்திக்கிறார். அவர் யார்? அவரை எந்தமாதிரியான தோற்றத்தில் இந்தியாவில் இருந்து சென்ற த்ரிஷா சந்தித்தார். அதையடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மோகினி படத்தின் கதையாம். அந்த வகையில், இந்த மோகினி படம் வழக்கமான ஹாரர் படங்களைப்போன்று மிரட்டலான படமாக இல்லாமல் உணர்வுப்பூர்வமான கதையில் உருவாகியிருக்கிறது.