கீர்த்தி சுரேஷ்

மிக குறுகிய நாட்களில் தனக்கென்ற தமிழ் சினிமாவில் இடத்தை பிடித்துவிட்டார் கீர்த்தி. கமெர்ஷியல் சினிமாவில் நடித்து வந்தவர் மகாநதி படத்தின் வாயிலாக தனது நடிப்பு திறமையையும் நிரூபித்தார்.

இந்நிலையில் இன்று காலை சர்கார் படத்தின் டீஸர் அக்டோபர் 19 மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பை சன் பிக்ச்சர்ஸ் ட்விட்டரில் வெளியிட்டனர்.

sarkarham

இந்நேரத்தில் கீர்த்தி சுரேஷ் “சர்கார் டீஸர் 19 ரிலீசாகிறது. ஆதலால் எனக்கு மூன்று வித கொண்டாட்டம்.” என்று ஸ்டேட்டஸ் தட்டினார்.

நம் நெட்டிசன்கள் என்னவாக இருக்கும் என்று அலச ஆரம்பித்தனர்.

அவரின் பிறந்தநாள், சண்டக்கோழி 2 மற்றும் சர்கார் டீஸர் ரிலீஸ் , இந்த மூன்றையும் தான் அவர் சொல்லியுள்ளார்.