Reviews | விமர்சனங்கள்
கொண்டாட்டமா, திண்டாட்டமா ? ட்ரிப் திரை விமர்சனம்
டார்லிங், 100, கூர்க்கா படங்களை இயக்கிய சாம் ஆண்டன் அவர்களின் அசிஸ்டன்ட் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் வெளியாகியுள்ள படமே ட்ரிப்.
ஹாலிவுட்டில் ரோட் பயணம் அல்லது ட்ரிப் செல்ல ஆரம்பித்து ஒரு ஒருவராக நரமாமிசம் சாப்பிடும் நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்படுவது என்ற ஹாரர் ஜானரில் பல படங்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக WRONG TURN பிரான்சைஸ் நாம் சொல்லலாம். அதில் இருக்கும் ஒன் லைன் வைத்தே தன் படத்தை இயக்கியுள்ளார் டென்னிஸ் மஞ்சுநாத்.
ஆரம்பத்தில் பிரிட்டிஷ் காலத்தில் பழங்குடியினர் வரலாறு, பின்னர் சயன்ஸ் பிக்ஷன் கலந்து DNA மாற்றம் என நரமாமிசம் சாப்பிடும் நபர்கள் பற்றி தெளிவாக விளக்குகிறார் இயக்குனர். 8 நண்பர்கள் யார் என்ற அறிமுகம் ஏதும் கொடுத்து நேரம் வீணாக்காமல், நேரடியாக கதைக்குள் சென்றத்துக்கும் இயக்குனருக்கு ஸ்பெஷல் க்ளாப்ஸ்.
சுனைனா காணாமல் போக , யோகி பாபு மற்றும் கருணாகரனை கொடூர வில்லன் என நண்பர்கள் முடிவு செய்கின்றனர். ஒருபுறம் மரணம் ஒன்றன் பின் ஒன்றாக நடக்க, மறுபுறம் காமெடி காட்சிகள் நடக்கிறது. சிரிப்பும் மனதில் ஒட்டவில்லை, மரணங்களும் நம்மை உறையவைக்கவில்லை. இரண்டு உணர்ச்சிக்கும் மத்தியில் பல இடங்களில் சலிப்பே ஏற்படுத்துகிறது.
ஹாரர் ஜானர் என முழு படத்தையும் எடுத்திருந்தால் கூட ஏ மற்றும் பி சென்டரில் ஹிட் அடித்திருக்கும். சி சென்டர் ரசிகர்களையும் கவர்கிறேன் பேர்விழி என அங்கே அங்கே காமெடியை நுழையது சற்றே நம் பொறுமையை சோதிக்கிறார்.

trip-cinemapettai
அசத்தலான ஒளிப்பதிவு, உறுத்தல் இல்லாத இசை, சார்பான எடிட்டிங், சூப்பரான இயக்குனரின் மேக்கிங் என டெக்கினிக்கல் விஷயத்தில் நல்ல ஸ்ட்ரோங் இந்த டீம். எனினும் கமெர்ஷியல் அம்சங்களை சேர்க்க நினைத்து கோட்டை விட்டுவிட்டனர்.
த்ரில்லரா அல்லது காமெடியா என்பதனை சரியாக யோசிக்க தவறியதால் கலங்கிய குட்டையாகவே முடிகிறது இந்த ட்ரிப். முதல் பாதி முழுக்க காமெடி, இரண்டாவது பாதி திரில்லர் என அமைத்திருக்கும் பட்சத்தில் கூட அனைவரும் ரசிக்கும் படி அமைந்திருக்கும் இந்த ட்ரிப்.
ரேட்டிங் 2 / 5
