நடிகர் கமல்ஹாசன் இந்துக்களின் புனித நூலான மகாபாரதம் மற்றும் இந்துக்களின் கலாசாரத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசி வருவதாக கூறி இந்து மக்கள் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்ட இந்து மக்கள் கட்சியினர் ஈரோடு எம்.ஜி.ஆர். சிலை அருகில் நடிகர் கமல்ஹாசனின் உருவபொம்மையை நேற்று எரிக்க முயன்றனர்.

அப்போது போலீசார், நடிகர் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் இந்து மக்கள் கட்சியின் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ், செயலாளர் ஆறுமுகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.