Connect with us
Cinemapettai

Cinemapettai

trichy-iob

Tamil Nadu | தமிழ் நாடு

வங்கியில் இருக்கும் பணத்தை அபேஸ் பண்ணும் வங்கி மேலாளர்கள்.. திருச்சியில் மோசடி

திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியின் வளாகத்தில் செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை ஒன்றில் நீண்ட நாட்களாக பணம் எடுக்க வராமல் இருந்த நபரின் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கி மேலாளர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள பிஎஸ்என்எல் ஊழியரான எமிலி சோலோ சமீபகாலமாக வங்கியில் பணம் எடுக்க வரவில்லை. ஏடிஎம்மில் மட்டுமே பணம் எடுத்துக் கொண்டிருந்த அந்தப் பெண், இரண்டு வருடங்களாக அதையும் செய்யவில்லை.

இதனால் சந்தேகமடைந்த வங்கி மேலாளர்கள் அந்தப் பெண்மணியை விசாரிக்கச் சென்றபோது அந்த பெண்மணி இறந்து விட்டதாக கூறப்பட்டது. மேலும் அவர் வங்கியில் சேர்த்து வைத்திருந்தால் 30 லட்ச ரூபாய் பணத்தை பற்றி அவரது வீட்டில் யாருக்கும் தெரியவில்லை.

இதனால் குஷியான மேலாளர்கள், அவரின் கணக்கில் இருந்த பணத்தை ஆட்டையைப் போட்ட திட்டம் தீட்டி, போலி ஏடிஎம் கார்டுகளை தயார் செய்து அவரது கணக்கிலிருந்து 25 லட்சம் வரை பணம் எடுத்துள்ளனர். மண்டல வங்கி மேலாளர் பிரேம்குமார் செய்த சோதனையில் இந்த மோசடித் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பணத்தை திருடிய ஷேக் முகைதீன் மற்றும் சின்னத்துரை மீது கூட்டு சதி, ஆள் மோசடி, திருட்டு வழக்கு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top