Connect with us

Cinemapettai

ஆழ்துளை கிணற்றுக்குழியில் விழுந்த குழந்தையை மீட்க கடும் போராட்டம்

surjith-1

India | இந்தியா

ஆழ்துளை கிணற்றுக்குழியில் விழுந்த குழந்தையை மீட்க கடும் போராட்டம்

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குழியில் விழுந்த இரண்டு வயது சிறுவனை மீட்க அதிகாரிகள் பல மணிநேரம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியதாஸ். இவர் கட்டிட தொழிலாளி. இவரது இளைய மகன் இரண்டரை வயது சுஜித் வின்சென்ட் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றுக் குழியில் தவறி விழுந்துள்ளான்.

சுமார் 5 ஆண்டுக்கு முன் தோண்டப்பட்டு பயன்பாடின்றி திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றின் 26 அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்டான் சிறுவன். தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த மணப்பாறை தீயணைப்புத்துறை மற்றும் பொதுமக்கள் குழியில் விழுந்த சிறுவனை மீட்கும் முயற்சியில் ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் அறிந்து நிகழ்விடத்துக்கு மணப்பாறை வட்டாட்சியர் தமிழ்மணி தலைமையிலான வருவாய்த்துறையினர் கூடுதல் பொக்லைன் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை வரவழைத்து ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் பள்ளம் ஏற்படுத்தும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர். காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையிலான போலீஸார் குவிக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு அப்பகுதியில் அளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் ஆதித்யாசெந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஹுல் ஹக் மற்றும் தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி. நடராஜன், எஸ்.வளர்மதி, மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் வந்தடைந்தனர்.

குழியில் கிக்கி உள்ள குழந்தையை தைரியப்படுத்தும் வகையில் தாய் கலாமேரி குழந்தையுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அருகில் தோண்டப்பட்ட குழி பாறை தென்பட்டதைத்தொடர்ந்து நிறுத்தப்பட்டு, மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆழ்துளை கிணற்று குழிகளிலிருந்து விழுந்த குழந்தையைமீட்கும் சிறப்பு கருவிகள் கொண்டு மீட்பு பணிகள் நடைபெற்றது. இதுவரை குழந்தை மீட்கப்படவில்லை.

https://twitter.com/ANUSUDHA159/status/1187848172602716160?s=20

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top