“கபாலி” படத்தின் வட இந்திய வெளியீட்டு உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. வட இந்தியா முழுவதும் சுமார் 1000 தியேட்டர்களுக்கு மேல் படத்தை அவர்கள் வெளியிட இருக்கிறார்கள். அதோடு படத்திற்காக சில வித்தியாசமான பிரமோஷன்களையும் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.

ஃபாஸ் ஸ்டார் நிறுவனம் நாளை மறுநாள் 15ம் தேதி “ஐஸ் ஏஜ் – கொல்லிசன் கோர்ஸ்” படத்தை வெளியிட உள்ளது. அந்த “ஐஸ் ஏஜ்” கதாபாத்திரங்களுடன் “கபாலி” படத்திற்கான டிரைலர் ஒன்றை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். ரஜினியின் “கபாலி” படத்தின் காட்சிகளைப் பார்த்து, “ஐஸ் ஏஜ்” கதாபாத்திரங்கள் ரசிப்பது போன்ற விதத்தில் அந்த டிரைலர் உருவாக்கப்பட்டுள்ளது.

வெளியான சிறிது நேரத்திலேயே அந்த டிரைலரை 40000க்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்தனர். தற்போது 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த டிரைலரை ரசித்துள்ளனர்.

“டிரிபியூட் டூ தலைவர்” – “ஐஸ் ஏஜ் 5  ” குழுவினரிடமிருந்து” எனத் தலைப்பிடப்பட்டுள்ள அந்த டிரைலர் “கபாலி” படத்திற்குக் கிடைத்துள்ள மற்றுமொரு பெருமை.