Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதிக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்.. ட்விட்டரை தெறிக்கவிடும் ஹேஸ்டேக்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக கொடி கட்டி பறக்கும் தளபதி விஜய் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்புக்கு இடையில் ரசிகர்கள் ட்விட்டரில் களமிறங்கி தளபதி விஜய்க்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். #WeStandWithVIJAY, #WeStandWithTHALAPATHY இந்த இரண்டு ஹேஸ்டேக்களும் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
நாங்கள் தளபதியுடன் இருக்கிறோம் என்ற ஹேஸ்டேக் ரசிகர்கள் அவர் மேல் வைத்துள்ள உண்மையான அன்பை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
இந்த வருமான வரி சோதனை நேற்று தொடங்கி பனையூர் வீட்டில் 15 மணிநேரம் நடை பெற்றதாகவும் தளபதி விஜய்யை நேரில் அழைத்து விசாரணை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக ஏ.ஜி.எஸ் அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பட்ட டாக்குமெண்டை வைத்து தளபதி விசாரித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதற்குப் பின்னால் அரசியல் சூழ்ச்சி இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திடீரென்று தளபதி விஜயின் வீட்டில் சோதனை நடத்துவதற்கான காரணமென்ன என்ற குழப்பத்தில் உள்ளனர்.
