Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்னடா இது டிரெண்ட்செட்டிங் இயக்குனர்களுக்கு வந்த சோதனை.. சரக்கு சரி இல்லபா
தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் என்ற பெயரில் நிறைய இயக்குனர்கள் தொடர் வெற்றி படங்களை கொடுத்து பிறகு ஒரு வெற்றி கூட பெற முடியாமல் சினிமாவை விட்டு விலகி வருவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்த காலத்தில் இருந்தே இது நடைமுறையில் இருந்துள்ளது. ஒரு காலத்தில் உச்ச இயக்குனராக இருந்த பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா போன்றவர்களும் பின்னர் சறுக்கியது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில இயக்குனர்கள் அந்த சூழ்நிலையில் தான் சிக்கியுள்ளனர். அதில் முதல் முதலில் இருப்பது ராஜேஷ். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என வெறும் 3 படங்களில் உச்சம் தொட்டவர்.
இவரின் மூலம்தான் சந்தானம் மிகப்பெரிய உயரத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கத்தில் வெளிவந்த ஆல் இன் ஆல் அழகுராஜா, மிஸ்டர் லோக்கல், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க போன்ற படங்கள் தோல்வியை தழுவி ராஜேசை அதல பாதாளத்தில் தள்ளி விட்டது.
அடுத்ததாக சுசீந்திரன். எதார்த்தமான சினிமாவை கொண்டு குறைந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க முடியும் என நிரூபித்தவர். இவர் இயக்கிய பாண்டிய நாடு, வெண்ணிலா கபடி குழு ஹிட்டடித்து தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியது. அதன்பிறகு சுசீந்திரன் இயக்கிய நான்கைந்து படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து அவருடைய சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த லிஸ்டில் கடைசியாக இருப்பவர் ஏ எல் விஜய். முன்னணி நடிகர்களை கொண்டு வெற்றி படங்களை கொடுத்து வந்த விஜய் சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். இவருடைய வெற்றிக்கு மதராசபட்டினம், தெய்வத்திருமகள் போன்றவை சாட்சிகள்.
ஆனால் அதன்பிறகு அவர் தலைவா, சைவம், தேவி2 உள்ளிட்ட பல படங்கள் பெரும் தோல்வியை சந்தித்து அவருடைய சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அடுத்ததாக இவர் தலைவி படத்தை பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார்.
ஒரு காலத்தில் சினிமாவின் போக்கை மாற்றிய அவர்கள் தற்போது வெற்றிக்கு தடுமாறுவது சினிமாவில் நுழைய முயற்சிக்கும் இளைஞர்களுக்கு சற்று பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஹாலிவுட் சினிமாக்களில் மட்டும் எப்படி 70 வயதானாலும் இயக்குனர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதை ஆராய்ச்சி செய்வது இவர்களுக்கு நல்லது.
