Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கும் தியேட்டர்கள்!

நடிகர் அஜித்தின் பிறந்தநாளான வரும் மே ஒன்றாம் தேதி அவர் நடிப்பில் மெகாஹிட்டடித்த கேங்ஸ்டர் படமான பில்லா படத்தை ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரசிகர்களால் `தல’ என அன்போடு அழைக்கப்படும் அஜித்குமார், தனது 47 ஆவது பிறந்தநாளை மே ஒன்றாம் தேதி கொண்டாடுகிறார். பிறந்தநாளுக்கு ஒரு மாதம் இருக்கும்போதே, சமூக வலைதளங்களில் அஜித் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் தயாராகி விட்டனர். ஆண்டுதோறும் அஜித் பிறந்தநாளை உலக அளவில் ட்ரெண்ட் அடிக்கச் செய்து வருகிறார்கள் தல ரசிகர்கள். அந்த வகையில் அஜித் பிறந்தநாளுக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், அது குறித்த தகவல்களையும், அஜித் நடித்த படங்கள் மற்றும் அவரது பெர்சனல் தகவல்களும் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், அஜித் பிறந்தநாளில் அவர் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த பில்லா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய சென்னை உள்ள சில திரையரங்குகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அஜித் – நயன்தாரா – நமீதா – பிரபு என பெரிய ஸ்டார் பட்டாளமே நடித்திருந்த பில்லா படம் கடந்த 2007-ல் வெளியாக பெரிய அளவில் பேசப்பட்டது. ரஜினி நடித்திருந்த பில்லா படத்தின் ரீ-மேக்காக உருவாக்கப்பட்ட அந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இரட்டை வேடத்தில் அஜித் அசத்தியிருந்த பில்லா படம், பெர்சனலாக அவரது கேரியரிலும் திருப்பு முனையாக அமைந்த படம். எனவே சென்டிமென்டாக அந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.

நடிகர் அஜித் தற்போது இயக்குநர் சிவாவுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்புக்காக வெயிட்டிங்கில் இருக்கிறார். வீரம், விவேகம் போலல்லாமல் இந்த படத்தில் புதிய கெட்டப்ப்பில், குறிப்பாக சால்ட் அண்ட் பெப்பர்தோற்றத்தை மாற்றி அஜித் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல், அஜித்துடன் நயன்தாரா மீண்டும் இந்த படத்துக்காகஇணைந்திருப்பது விஸ்வாசம் படத்துக்கான எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது. மற்றொரு சிறப்பம்சமாக அஜித் படத்துக்குமுதல்முறையாக டி.இமான் இசையமைக்கிறார். கடந்த மார்ச் மாதமே தொடங்கியிருக்க வேண்டிய விஸ்வாசம் படப்பிடிப்புதிரைப்படத்துறையினரின் வேலைநிறுத்தத்தால் தள்ளிப்போனது.

தற்போது வேலைநிறுத்தம் முடிந்திருப்பதால், படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஸ்வாசம் படத்துக்காக பல கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட செட் ஒன்று ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பல நாட்களாக வெயிட்டிங்கில் இருக்கிறதாம். படப்பிடிப்பு தொடங்க தாமதமானதால், அறிவிக்கப்பட்டபடி தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்வது சற்று சிரமமான விஷயம் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். ஒருவேளை தீபாவளிக்கு படம் வெளியாகவில்லை என்றால், படத்தில் டீசர் அல்லது ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தும் முடிவில் இருக்கிறதாம் படக்குழு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top