fbpx
Connect with us

சிங்கமென வா தலைவா..! அமெரிக்கா சென்றார் கேப்டன் விஜயகாந்த்..!

Politics | அரசியல்

சிங்கமென வா தலைவா..! அமெரிக்கா சென்றார் கேப்டன் விஜயகாந்த்..!

பூரண நலத்தோடு சிங்கமென வா தலைவா..!

தமிழ் சினிமாவில் கேப்டனான அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்துள்ளார். வேறு எந்த மொழியிலும் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை என்பது இவரின் சிறப்பு. இவர் இருந்த காலகட்டத்தில் வளர்ந்து வந்த நடிகர்களுடன் சேர்ந்து நடித்து அவர்களையும் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தில் தக்க வைத்தார்.

இவர் சில காலங்களில் முன்பு சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கியுள்ளார். தே.மு.தி.க கழக பொதுச் செயலாளராக மற்றும் நிறுவன தலைவராக பதவியில் உள்ளார். அண்மைக்காலமாக இவரது உடல் நலக்குறைவால் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

சில நாட்கள் முன்பு அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். தே.மு.தி.க அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் தற்போது வெளியாகியுள்ளது அதில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா,அவரது இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் சென்னையிலிருந்து புறப்பட்டார்கள். ஒரு மாதகாலம் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்கிறார்.

சிகிச்சைகாக தலைவர்

கேப்டன் அமெரிக்கா பயணம்….

பூரண நலத்தோடு சிங்கமென வா தலைவா!

காத்திருக்கிறோம் உங்களின் வரவுக்காக!!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Politics | அரசியல்

Advertisement

Trending

To Top