fbpx
Connect with us

Cinemapettai

GV பிரகாஷ், நெப்போலியன் நடித்த TRAPCITY என்ற ஹாலிவுட் பட டீசர் ரிலீஸ்.. இணையத்தை கலக்கும் திரில்லர்!

Videos | வீடியோக்கள்

GV பிரகாஷ், நெப்போலியன் நடித்த TRAPCITY என்ற ஹாலிவுட் பட டீசர் ரிலீஸ்.. இணையத்தை கலக்கும் திரில்லர்!

தனுஷை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் ஹாலிவுட் படங்களில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்துள்ளார். அந்த படத்திற்கு டிராப் சிட்டி என பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் ஜீவாவுடன் நெப்போலியன் இணைந்து நடித்துள்ளார். நெப்போலியன் ஏற்கனவே வெளிநாடுகளில் செட்டிலாகி அவ்வப்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் நெப்போலியன் தவிர இந்த படத்தில் டாண்டன் டி ஜாக்சன் என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த டிராப் சிட்டி படத்தில் ஜிவி பிரகாஷ் டாக்டராக நடித்துள்ளார்.

இந்த டீசர் தற்போது இணையதளங்களில் செம வைரலாகி வருகிறது. க்ரைம் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ட்ராப் சிட்டி படத்தை தமிழில் டப் செய்து வெளியிடவும் பணிகள் நடந்து வருகிறதாம்.

டிராப் சிட்டி பட டீசர்:

Continue Reading
To Top