இவர் இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் எனும் பெருமையை பெறுவதற்கு பெரும் போராடி வெற்றி பெற்றுள்ளார் தமிழ்ச்செல்வி.

இவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர் இரண்டு ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு செவிலியர் படிப்பில் இடம் பெற்ற திருநங்கை என்ற சாதனையை தன்வசப்படுத்தி உள்ளார். இவர் செவிலியர் ஆவது தன் கனவாக கொண்டுள்ளார். அதற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த வேலை ஆகும்.

இவர் மருத்துவக்கல்வி இயக்கங்களில் தேர்வு குழு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதையெடுத்து மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து விசாரித்து அவரை நர்சிங் படிப்பில் சேர அனுமதி அளித்தது தீர்ப்பளித்தது. பெற்றோர் அரவணைப்பு இருந்தால் போதும் முன்னேறி விடலாம் என்றார் திருநங்கை தமிழ்ச்செல்வி அவர்கள்.

தமிழ்செல்வியின் தாயான அமுதா அவர்கள் கூறியதாவது; மருத்துவத்துறையில் சேர்ந்துள்ள தமிழ்ச்செல்வி மற்ற திருநங்கைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பார் என்றும் மன உறுதி இருந்தால் போதும் எங்கு இருந்தாலும் எப்படி இருந்தாலும் வெற்றி பெறலாம் என்பதை சகோதரி தமிழ்ச்செல்வி சாதித்து காட்டியுள்ளார். சினிமாபேட்டையின் சார்பாக சகோதரி தமிழ்ச்செல்வி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.