fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பெத்தவனும் பொறுப்பில்லை மத்தவனும் பொறுப்பில்லை.. கதறி அழும் நமிதா வீடியோ.!

bigg-boss-promo

Videos | வீடியோக்கள்

பெத்தவனும் பொறுப்பில்லை மத்தவனும் பொறுப்பில்லை.. கதறி அழும் நமிதா வீடியோ.!

பிக்பாஸில் இந்த வார டாஸ்க்காக போட்டியாளர்கள் கடந்து வந்த துயரங்களைப் பற்றி கூறுகிறார்கள். தாங்கள் கடந்து வந்த பாதையைப் பற்றி ஒவ்வொருவரும் கூறி வந்த நிலையில் தற்போது நமிதா மாரிமுத்து பேசுவது போன்ற ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில் திருநங்கையான நமிதா மாரிமுத்து நம்ம வாழ்க்கையில எவ்வளவு குறைகள் இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்று எங்க அம்மா சொல்வாங்க. ஆனால்  என்ன அவங்க ஏத்துக்கல. அடி மேல அடி கொடுத்து உடம்பே மறந்து போச்சு என்று நமிதா கதறி அழுகிறார்.

இந்த சமுதாயம் திருநங்கைகளை பாலியல் தொழிலுக்கும், பிச்சை எடுப்பதற்கு மட்டுமே பார்க்கிறது என்று உருக்கமாக கூறுகிறார். திருநங்கைகளோட இந்த நிலைமைக்கு காரணம் பெத்தவங்க தான் என்று கண்கலங்கி கூறுகிறார். இவரது பேச்சை கேட்ட போட்டியாளர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு அழுகின்றனர்.

மாற வேண்டியது நாங்க இல்ல நாங்க எப்பவோ மாறிட்டோம் இந்த சமுதாயம் இன்னும் மாறல. பெத்தவனும் பொறுப்பில்லை மத்தவனும் பொறுப்பில்லை என அவர் பாடும் பாடலோடு ப்ரோமோ முடிகிறது.

நமிதாவின் இந்தப் பேச்சு அவர் எவ்வளவு துயரங்களை கடந்து வந்தார் என்பது நமக்குத் தெரிகிறது. இன்றைய எபிசோடில் திருநங்கைகளின் அவலங்களைப் பற்றி அவர் மேலும் கூறுவார் என்று தெரிகிறது. ஊர் ஆயிரம் சொன்னாலும் பெற்றவர்கள் ஆதரவும், துணையும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top