India | இந்தியா
75 ஏக்கர் இடத்தில் இலங்கையில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி.. அதிர்ச்சி தகவல்!
பிரபல நாளிதழான கொழும்பு நாளிதழ் இலங்கையில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் 160 பேர் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள பிரபல நாளிதழான கொழும்பு நாளிதழ் இலங்கையில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் 160 பேர் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் வெடி பொருட்களுடனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டலில் வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அந்த தாக்குதலால் 359 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 39 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பிற்கு தலைமை தாங்கிய நபர் தற்கொலைத் தாக்குதலில் பலியானதாக கூறியுள்ளனர்
வெள்ளம் ஆலையில் போலீஸ் நடத்திய சோதனையில் வெள்ளி தயாரிப்பு என்ற பெயரில் வெடிபொருள்கள் தயாரித்தது தெரியவந்துள்ளது. வானத்து வில்லு என்ற இடத்தில் போலீஸ் நடத்திய சோதனையில் தீவிரவாதிகள் பட்டியல் கிடைத்துள்ளதாகவும். 75 ஏக்கர் தென்னந்தோப்பில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
