fbpx
Connect with us

விஜய் பிறந்தநாளில் வெளியாகும் டிராபிக் ராமசாமி படம்…. எஸ்.ஏ.சந்திரசேகரின் திட்டம்

News | செய்திகள்

விஜய் பிறந்தநாளில் வெளியாகும் டிராபிக் ராமசாமி படம்…. எஸ்.ஏ.சந்திரசேகரின் திட்டம்

நடிகர் விஜய் பிறந்தநாளில் டிராபிக் ராமசாமி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் திரைப்படம் தயாராகியுள்ளது. புதுமுகம் விக்கி இயக்கியுள்ள அந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக டைட்டில் ரோலில் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார்.

இந்த படத்தில் டிராபிக் ராமசாமியின் மனைவி கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், குஷ்பு, சீமான், விஜய் ஆண்டனி, மோகன் ராமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் முடிந்து ரிலீஸூக்குத் தயாராகி இருக்கிறது.

டிராபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் படத்துக்காக சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார். சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி, நிஜ வாழ்வில் போலீஸார் மற்றும் அரசியல் கட்சியினருக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். மனித உரிமை மீறல்கள், சமூக அவலங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்து தீர்வு காண முயற்சிப்பவர்.

இதனால், பல்வேறு தரப்பிலும் அவருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதோடு, சில இடங்களில் தாக்குதலுக்கும் உள்ளாகியிருக்கிறார். அதுபோன்ற காட்சிகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதுடன், காட்சிகள் உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக டூப் போடாமல் நடித்துக் கொடுத்திருக்கிறாராம். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் டீசரை, நேர்மையான அதிகாரி என மக்கள் மத்தியில் பெயரெடுத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்வதற்காக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு டிராபிக் ராமசாமி படக்குழுவினர் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், நடிகர் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22-ல் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு அனுமதி கேட்டுள்ளது. அதற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதலும் கிடைத்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top