சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கிறார். அவரது மனைவியாக ரோகிணி நடிக்கிறார். மேலும் ஆர்.கே.சுரேஷ், உபாசனா அம்பிகா, லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, விஜய் ஆன்டனி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இயக்குனர் விக்கி எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். பாலு முரளி இசை, குகன்.எஸ்.பழனி ஒளிப்பதிவு. பிரபாகர் படத்தொகுப்பு. ஈரோடு மோகன் என்பவர் க்ரீன் சிக்னல் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

இன்று இப்படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.