Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஷங்கரை ஏமாற்றிய ட்ராபிக் ராமசாமி படக்குழு

ட்ராபிக் ராமசாமி படத்தை தன்னால் இயக்க முடியவில்லை என இயக்குனர் ஷங்கர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

ட்ராபிக் ராமசாமி ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொதுநலச் சேவகர் ஆவார். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்துவது இவரது வழக்கம். இதனால்தான் இவருக்கு ட்ராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது. பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடுவது என்கிற நடைமுறையைக் கடைப்பிடிக்கிறார். பலருக்கு தெரியாத இவரின் வாழ்க்கையை படமாக உருவாக்கப்பட்டு சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

புகழ்பெற்ற ட்ராபிக் ராமசாமியாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். ரியல் மனிதராக வாழ்ந்த எஸ்.ஏ.சியை பலரும் பாராட்டி வருகிறார்கள். படத்தை அறிமுக இயக்குனர் விக்கி இயக்கி இருக்கிறார். ரோகிணி, பிரகாஷ்ராஜ், ஆர்.கே. சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

’ஹரஹரமகா தேவகி’ இசையமைப்பாளர் பாலமுரளி பாலு படத்தை இசையமைத்துள்ளார். படத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியாகி இருக்கும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் எஸ்.ஏ.சியின் நடிப்பை பாராட்டி இருக்கிறார். ஆனால், இப்படம் தனக்கு வருத்தம் தருவதாக குறிப்பிட்டு இருக்கிறார். அதற்கு காரணம், ட்ராபிக் ராமசாமி ஷங்கரை பாதித்த ஒரு மனிதராம். அவருக்குள் தான் ரியல் நாயகன் இருப்பதாக நம்புகிறார். அதனால் இப்படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்க வேண்டும் என முடிவு செய்து இருந்தாராம். ஆனால், அதற்கு முன்னரே இப்படம் தயாராகி விட்டதால் தன்னால் இயக்க முடியவில்லை என்ற சோகத்தில் இருக்கிறார் ஷங்கர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top