Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிலிம் சிம்பு பற்றி தங்கை இலக்கியாவின் உருக்கமான பதிவு

இன்று நம் கோலிவுட்டின் ஹட் டாபிக்  சிம்பு என்கிற சிலம்பரசன் தான்.

சிறு வயதிலிருந்தே தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பது, பாட, ஆட வைப்பது என பன்முக திறமை உடையவராக இவரை ஆகிவிட்டார் டி ராஜேந்தர்.அப்பாவே குருவாக கிடைக்கப்பெற்றவர்கள் வெகு சிலரே.

மிகவும் குறைந்த வயதில் சிம்பு தொட்ட உச்சங்கள் ஏராளமோ ஏராளம். ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, சிம்புவின் இந்த அசுர வளர்ச்சி அவரை அதலபாதாளத்திற்கு தள்ளியது. தொடர்ந்து சர்ச்சை, ஷூட்டிங் செல்வதில்லை, படத்தில் அதீத குறுக்கீடுகள் என பீல்ட அவுட் ஆனார். நடிகர் சங்கம் ரெட் கார்ட் கொடுக்கும் அளவுக்கு சென்றது நிலை. உடல் எடை கூடி பார்ப்பதற்கே வயதான தோற்றத்தில் இருந்தார்.

STR

ஒவ்வொரு முறையும் எழுந்து வருவார்,  மீண்டும் ஏதவது நெகட்டிவ் விஷயமே அடுத்தபடியாக வரும். இப்படி பட்ட சூழலில் ஊரடங்கு நாட்களை தனக்கு ப்ளஸாக மாற்றிவிட்டார் சிம்பு.

லாக் டவுனில் தற்போது 25 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறியுள்ளார் சிம்பு. அடுத்தடுத்த பட அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இவாறு மாறிய சிம்பு பற்றி அவர் தங்கை பதிவிட்ட ஸ்டேட்டஸ் இதோ ..

“இப்படி ஆக அவர் ரொம்ப கஷ்டப்பட்டார். இது எடையை குறைக்க மட்டும் அல்ல அவரின் வாழ்க்கை குறிக்கோளை உணரவும் தான். இந்த பயணத்தின்போது நான் அவருடன் சில நாட்கள் இருந்தேன். தன் குறிக்கோள்களை அடைய அவர் கடினமாக உழைத்ததை பார்த்தேன். ஹாட்ஸ் ஆஃப்” என்று தெரிவித்துள்ளார்.

tr elakkiya tweet

தனக்கு எப்பொழுதும் ஆதரவாக இருக்கும் ரசிகர்களுக்காகத் தான் சிம்பு எடையை குறைத்து ஒல்லியாகியுள்ளார் என்று அவரின் ட்ரெய்னர் சந்தீப் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top