fbpx
Connect with us

Cinemapettai

பிரபல நடிகருக்காக ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்ட நடிகை.. பாதியில் கழட்டி விடப்பட்ட முன்னாள் குடிகார காதலர்

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு

பிரபல நடிகருக்காக ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்ட நடிகை.. பாதியில் கழட்டி விடப்பட்ட முன்னாள் குடிகார காதலர்

பிரபல நடிகைக்கும் எனக்கும் கூடிய விரைவில் கல்யாணம் என்று இரண்டெழுத்து நடிகர் கெட்டிமேளம் கொட்டிக் கொண்டிருந்த சூழ்நிலையில் அந்த நடிகை தானாகவே முன்வந்து அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்திருந்தார். எங்களுக்கு கல்யாணம் எதுவும் இல்லை நட்பு மட்டும் தான் உள்ளது என்று நடிகரின் மண்டையில் ஒரு கொட்டு வைத்தது போல் கூறினார்.

முதலில் காதலித்து வந்துள்ளனர். ஆனால் நடிகரின் போக்கைப் பார்க்கும்போது குடித்துவிட்டு இரவு நேரங்களில் காரை விபத்துக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று முடிவெடுத்து முதல் வெற்றிப்பட நடிகருக்கு ரூட் போட்டு உள்ளாராம்.

சென்னையில் ஒரு ஏரியாவின் தலைப்பில் உருவான படத்தின் மூலம் அறிமுகமான அந்த நடிகர் மற்றும் நடிகை ஜோடி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மீண்டும் நடிகைக்கு தமிழ்சினிமாவில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

தன்னைப்போலவே அந்த நடிகரும் தமிழ் சினிமாவில் இடம் பிடித்து விடுவார் என்ற நம்பிக்கையில் அவர் மேல் காதல் வலையில் விழுந்துள்ளார். இதனால் பைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டுக் கொடுத்துள்ளார், அதுமட்டுமில்லாமல் காசுகளை வாரி இறைத்து உள்ளாராம் நாயகி.

ஆனால் சினிமா வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் அந்த நடிகரை கழட்டி விட்டாராம். இதற்கு பின்னர்தான் அந்த நடிகை அமெரிக்காவிலுள்ள அக்கட தேச தொழிலதிபரை கைவசம் மடக்கி போட்டுள்ளாராம்.
இதனால் இந்த நடிகருக்கு முன்னதாக அவர் இருந்திருப்பாரோ என்ற குழப்பத்தில் ரசிகர்கள் மண்டையை உடைத்து வருகின்றனர்.

வாய்ப்புகள் இருக்கு நேரங்களில் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான், ஆனால் கல்யாணம் மட்டும் செய்து விடக் கூடாதாம். பொண்ண ரொம்ப அற்புதமாக வளத்திருக்கீங்க!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top