இத்தனை ஓபனர்களா.? குழப்பத்தின் உச்சத்திற்கு சென்ற விராட் கோலி, யார் அந்த பலியாடு!

இந்திய அணியில் முக்கிய வீரர் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்நிலையில் யாரை துவக்க ஆட்டக்காரராக களம் இறக்குவது என்ற குழப்பத்தில் உள்ளார் அணியின் கேப்டன் விராட் கோலி.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடக்கவிருக்கும் முதல் ஒருநாள் போட்டி நவம்பர் மாதம் 27ம் தேதி துவங்குகிறது. இந்த நிலையில் இந்திய அணியில், முக்கிய வீரரான ரோஹித் சர்மா இல்லாததால் யாரை துவக்க வீரராக ஆட வைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்கவில்லை. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் உடன் யாரை இறங்க வைப்பது என யோசித்துக் கொண்டிருக்கிறது இந்திய அணி.

தற்போது தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் கே எல் ராகுல், ஷுப்மன் கில், மயங்க் அகர்வால் என மூன்று துவக்க வீரர்கள் உள்ளனர்.ராகுல் ஒருநாள் மற்றும் டி20 அணியில் விக்கெட் கீப்பிங் பணியை செய்து வருகிறார். எனவே அவரது, பேட்டிங் பலுவை குறைக்கும் வகையில் மிடில் ஆர்டரில் ஆட வைக்கப்பட்டு வருகிறார்.

மேலும் இளம் வீரரான ஷுப்மன் கில் 2020 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தார். ஆனால் அவர் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியது விமர்சனத்துக்கு உள்ளானது.

அடுத்ததாக மயங்க் அகர்வால் டெஸ்ட் அணியின் முக்கிய துவக்க வீரர் என்பதால் அவரை ஒருநாள் தொடரில் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு போட்டி மட்டும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. எது எப்படியோ இன்னும் இரு நாட்களில் ரோகித் சர்மா இடத்தில் யார் விளையாடப் போகிறார் என்பது தெரியும்.

Shubam-Rahul-Agarval-Cinemapettai
Shubam-Rahul-Agarval-Cinemapettai