2014ம் ஆண்டு விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவை படம் குயின். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் ஏகப்பட்ட விருதுகளை வாங்கி குவித்தது.

முக்கியமாக இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கங்கனா ரனாவத் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். 12.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு யாரும் நம்ப முடியாத அளவிருக்கு 108 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

kangana ranautஇப்போ என்ன ஹாட் நியூஸ்னா இந்த படத்தோட ரீமேக்ல கங்கனா நடிச்ச கதாபாத்திரத்தில் நம்ம காஜல் அகர்வால் நடிக்கபோறாங்க. இந்த படம் தமிழ் மொழியிலும் சூட் செய்யப்படவுள்ளது. படத்தை இயக்கபோரவரு நம்ம ரமேஷ் அரவிந்த்.

ஹிந்தி படத்துல வருகிற நகைச்சுவையை அப்படியே வைக்காமல் தமிழ் ரசிகர்களுக்கு ஏத்த மாதிரி திரைக்கதை மற்றும் காமெடியில் திருத்தம் செய்தது இயக்கப் போறதா ரமேஷ் அரவிந்த் சொல்லிருக்காரு.

kajal aggarwal stillஒரு தேசிய விருதை வாங்கித் தந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்கபோவதுதனக்கு மிகவும் பயம் கலந்த மகிழ்ச்சியளிக்கிறது, கங்கனாவை கட்டாயம் ரோல் மாடலாக கொண்டு இந்த படத்தில் முடிந்த அளவு நன்றாக நடிப்பேன் என்று காஜல் அகர்வால் சொல்லிருக்காங்க.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: எல்லாம் சரி இந்த ரமேஷ் அரவிந்த் உத்தம வில்லன்லையே காமெடி பண்றேன்னு கொன்னு கொலை அறுத்தவரு… இப்போ குயின் படத்துல காமெடி திருத்தம் செய்யப் போறேன்னு சொல்றாரு… என்னாகுமோ….