Connect with us
Cinemapettai

Cinemapettai

varisu-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மொத்த யூனிட்தையும் குழப்பும் விஜய்.. வாரிசு படத்தில் காட்டும் கஞ்சத்தனம்

விஜய் வாரிசு படத்தில் பெரிய மல்டி மில்லினராக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் விஜய் செய்யும் செயல் இந்த படத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. இந்த படம் இதுவரை விஜய் நடிக்காத கோணலில் உருவாகி வருவதால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

விஜய் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு எவ்வளவு செலவுகளை குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து வருகிறாராம் குறிப்பாக ஆடை விஷயத்தில் ரொம்பவும் கஞ்சனாக செயல்பட்டு வருகிறாராம். இந்த கதாபாத்திரம் ஒரு மல்டி மில்லினர் கதாபாத்திரம் அதற்குத் தகுந்த ஆடைகளை செலவு செய்யாமல் மிக குறைந்த விலையில் ஆடைகளை வாங்க சொல்கிறாராம்.

Also Read: ரிலையன்ஸ் உடன் கைகோர்க்கும் தளபதி விஜய்

படத்தில் விலை தெரியப்போவதில்லை கலர் மட்டும் தான் தெரிகிறது அதனால் குறைந்த செலவில் ஆடைகளை வாங்குங்கள் என்று காஸ்டியூம் டிசைனர்களுக்கு அறிவுரை கூறி வருகிறாராம்.

மற்ற ஹீரோக்கள் அனைவரும் ஆடை நன்றாக இருப்பதா என்று பார்ப்பதில்லை அதில் தொங்கவிடப்பட்டிருக்கும் பிரைஸ் டாக்கை மட்டுமே பார்ப்பார்கள். அதிக விலை உயர்ந்த ஆடைகளை கண்ணை மூடிட்டு செலக்ட் செய்து விட்டுவிடுவார்கள்.

Also Read: தளபதி விஜய்யை வெச்சு செய்த படக்குழு, சரத்குமார் என்னய்யா பாவம் பண்ணாரு?

ஆனால் விஜய் இப்படி செய்து வருவது படக் குழுவில் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது . பொதுவாக விஜய் என்றாலே சிக்கனமாக செயல்படுவார் என்ற பெயர் அவருக்கு சினிமா துறையில் நிலவி வருகிறது. வீட்டில் இருந்து வரவழைத்த சாப்பாடு. ட்ரீட் என்றால் வீட்டிலேயே சமையல் செய்து தருவது என காசுகளை மிச்சப்படுத்தி கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அவருக்கு விதிக்கப்பட்ட ஒன்றரை கோடி ரூபாயைக் கூட கோர்ட்டில் கேஸ் போட்டு தடை வாங்கி விட்டார். இதனால் விஜய் இப்படிப்பட்டவரா என மொத்த யூனிட்டும் குழம்பி வருகிறது.

Also Read: 4-வது முறையாக தளபதி விஜய்யுடன் ஜோடி சேரும் நடிகை

Continue Reading
To Top