Tamil Cinema News | சினிமா செய்திகள்
2020 ஆம் ஆண்டு தியேட்டரில் மொத்தம் எத்தனை படம் ரிலீசாகியுள்ளது தெரியுமா? 3 மாதத்தில் இவ்வளவு படமா!
தற்போது நிலவி வரும் சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் தியேட்டர்கள் மூடப்பட்டதை தொடர்ந்து கிட்டத்தட்ட 150 நாட்களை தாண்டி 200 நாட்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
வழக்கமாக தியேட்டர்கள் ஒரு படத்தின் போஸ்டரை தான் 200 நாட்கள் என்று ஒட்டுவார்கள். ஆனால் போகிற போக்கை பார்த்தால் தியேட்டர் மூடி 200 நாள் ஆகிறது என போஸ்டர் ஒட்டி விடுவார்கள் போல.
அனைத்து விதமான தளர்வுகளும் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட நிலையில் தியேட்டர்களுக்கு மட்டும் ஏன் இன்னும் தளர்வுகள் இல்லை என தொடர்ந்த அரசிடம் முறையிட்டு வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க 2020 கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி முதல் தற்போது வரை தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. அதுவரை சுமார் 46 படங்கள் வெளியாகி உள்ளது.
இன்னேரம் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் வெளியாகியிருக்க வேண்டிய நிலையில் வெறும் 46 படங்கள்தான் வெளியாகியுள்ளதால் பலருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது.
வெளிவந்த 46 படங்களில் வெறும் நான்கு முதல் ஐந்து படம் தான் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்களும் வீட்டிலிருந்து படம் பார்க்க பழகிக் கொண்டதால் இனி தியேட்டரில் கூட்டம் கூடுமா என்பதே சந்தேகம்தான்.
முன்னணி நடிகர்களின் படங்களை தவிர மற்ற படங்கள் நேரடியாக OTT தளங்களில் விட்டுவிடுவதுதான் ராஜதந்திரம் என்கிறது சினிமா வட்டாரம்.
