புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

40வது பிறந்தநாளை கொண்டாடும் சர்ச்சைகளின் ராணி.. ராஜ வாழ்க்கை வாழும் நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு

Nayanthara: கடந்த இரண்டு நாட்களாக நயன்தாரா தான் சோசியல் மீடியாவின் பரபரப்பு செய்தியாக இருக்கிறார். தனுஷ் மீது ஒரு பெரும் குற்றச்சாட்டை முன்வைத்த இவரை ரசிகர்கள் பிறந்தநாள் என்றும் பாராமல் இன்றும் ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் அவருடைய திருமண வீடியோ தான். சர்ச்சைகளை கடந்து இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் அந்த ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. அதை பார்க்க வேண்டும் என நயன்தாராவும் சோசியல் மீடியாவில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்..

ஆனால் அவர் மீது வெறுப்பில் இருக்கும் ரசிகர்கள் அதுக்கெல்லாம் எங்களுக்கு நேரமில்லை, ஃப்ரீயா யூட்யூபில் போடுங்க என கலாய்த்து வருகின்றனர். ஆனால் இந்த சர்ச்சைகள் எல்லாம் அவருக்கு புதிது கிடையாது.

இதுபோல் ஏகப்பட்ட பிரச்சனைகளை கடந்து வந்திருக்கும் நயன்தாரா இன்று தன்னுடைய 40வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து சொல்லி வரும் நிலையில் அவரின் மொத்த சொத்து மதிப்பு பற்றி காண்போம்.

தமிழ் உட்பட பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். சமீப காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தான் இவர் தேர்ந்தெடுத்த நடித்து வருகிறார்.

நயன்தாராவின் சொத்து மதிப்பு

அவை வரவேற்பு பெறுவதால் தற்போது இவருடைய சம்பளமும் ஹீரோக்களுக்கு நிகராக இருக்கிறது. அதேபோல் ஏகப்பட்ட கண்டிஷனோடு தான் படத்தில் நடிக்கவே இவர் சம்மதிக்கிறார். இருப்பினும் இவர் கைவசம் நிறைய படங்கள் இருக்கின்றன.

அதே சமயம் நடிப்பை தாண்டி தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அது மட்டும் இன்றி ஏகப்பட்ட பிசினஸ் செய்து லாபம் பார்த்து வருகிறார்.. அதன்படி நாப்கின், லிப் பாம், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளை வியாபாரம் செய்து வருகிறார்.

இது தவிர வெளிநாட்டிலும் சில பிசினஸில் முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் கோடிக்கணக்கில் விலை பெறும் ஐந்து சொகுசு கார்களை வைத்துள்ளார். அது மட்டும் இன்றி தனியார் ஜெட் விமானமும் இருக்கிறது. இத்துடன் சேர்த்து சொகுசு வீடு உள்ளிட்டவையும் இருக்கிறது.

தற்போது விளம்பரப் படத்திலும் அவர் கவனம் செலுத்தி வருவதால் அதன் மூலமும் கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. இப்படியாக இவர் சேர்த்து வைத்திருக்கும் மொத்த சொத்து மதிப்பு 200 கோடியை தாண்டும் என்கின்றனர்.. 40 வயதில் இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கும் நயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

- Advertisement -

Trending News