மொத்தமும் தெரிந்தும் கூட கமல், அனிருத் விட்ட கோட்டை.. கண்டுக்காமல் கவுத்திய உதயநிதி

கமல் நடிப்பதையும் தாண்டி இயக்குவதிலும் கொடி கட்டி பறந்தவர். விக்ரம் என்னும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தவர் இன்று அதற்கு நேர்மாறாய் இந்தியன் 2 என்ற படுதோல்வி படத்தை கொடுத்து விட்டார் என மொத்த ரசிகர்களையும் பேச வைத்து விட்டார் உலக நாயகன்.

மிகவும் எதிர்பார்த்த இந்தியன் 2 படம் மண்ணை கவியது என்பதுதான் அனைவருடைய கருத்து. இந்த படம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் 30 நிமிடம் ஓடுகிறது. சுவாரசியம் இல்லாமல், மிகவும் அதிக நேரம் ஓடியதால் தான் இதற்கு இப்படி ஒரு விமர்சனம் கிடைத்துவிட்டது என்பது தவிர்க்க முடியாத உண்மை

இந்த படம் எடுபடாது என்பது கமல் மற்றும் அனிருத் இருவருக்கும் முன்பே தெரிந்திருக்கிறது. கமல் டப்பிங் பேசும் பொழுது இந்த படத்தில் சுவாரசியமே இல்லை அடுத்தடுத்த காட்சிகளுக்கு சம்பந்தமில்லை என தோன்றியிருக்கிறது. இவரை போலவே ரீ ரெக்கார்டிங் செய்யும் பொழுது அனிருத்துக்கும் தோன்றியுள்ளது.

கண்டுக்காமல் கவுத்திய உதயநிதி

இப்படி அவர்களுக்கு தோன்றியதை சங்கரிடம் தெரிவித்தால் அவர் ஏற்றுக் கொள்வாரா என இருவரும் யோசித்து அவரிடம் சொல்லாமல் விட்டு விட்டனர். அனிருத் கூட சொல்ல வேண்டாம் ஆனால் சகலமும் அறிந்த கமலும் சொல்ல தவறியது தான் அனைவருக்கும் ஆச்சரியம்.

சங்கரிடம் படம் ஸ்லோவா இருக்கிறது, காட்சிகள் சுவாரஸ்யம் இல்லாமல் நகர்கிறது என்பதை கமல் மற்றும் அனிருத் இருவரும் தெரிவிக்காமல். மாறாக உதயநிதி மற்றும் லைக்காவிடம் தெரிவித்துள்ளனர். அவர்களும் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். இதுதான்படத்திற்கு ஒரு பெரிய மைனஸ் ஆக மாறி இப்படி ஒரு விமர்சனம் கிடைத்துவிட்டது.

Next Story

- Advertisement -