ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மொத்தமாக காலியாகும் பாலிவுட் இண்டஸ்ட்ரி.. வெளியான 26 படங்களில் இந்த ஒரு படம் மட்டுமே வெற்றி

பாலிவுட்டில் ஒட்டு மொத்தமாக 25 படங்கள் தோல்வியடைந்து அந்த இண்டஸ்ட்ரியை அதல பாதாளத்தில் தள்ளி உள்ளது. தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்கள் வெற்றிப்படுகட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கும் போது பாலிவுட்டில் சொல்லும் அளவிற்கு சிறப்பான எந்த கதையும் கொண்ட திரைப்படம் வெளியாகவில்லை என்பது அதிர்ச்சியே.

பாலிவுட் தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தில் பாதி கூட எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். 105,150, 200, 300 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 7 திரைப்படங்கள் மிகப்பெரிய பிளாப் ஆகி உள்ளது. மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் தோல்வி அடைந்தது பாலிவுட் வட்டாரத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இவ்வாறு படுதோல்வியை சந்தித்த சில படங்களின் லிஸ்ட் இதோ:

சாம்ராட் பிருத்விராஜ் –  12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிருத்விராஜ் மன்னனின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட திரைப்படம் ஆகும். 300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தின் மொத்த வசூல் 70.33 கோடி மட்டுமே. இது தான் பாலிவுட்டின் மிகப்பெரிய சறுக்கல்.

ஷம்ஷேர – ரன்பீர் கபூர், வாணி கபூர், சஞ்சய் தத் நடித்த திரைப்படம். 150 கோடியில் உருவான இந்த திரைப்படம் 44.09 கோடிகள் மட்டுமே வசூலித்தது. ஜக் ஜக் ஜியோ -கரண் ஜோஹ்ரின் தர்மா புரொடக்சனில் வெளிவந்த திரைப்படம் ஜக் ஜக் ஜியோ. 105 கோடியில் உருவான இந்த படத்தின் மொத வசூல் 84.09 கோடி.

கங்குபாய் கத்தியவாடி: பாலிவுட் படங்கள் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில் ஆலியா பட் நடிப்பில் முன்னணி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி திரைப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். மேலும் மும்பையின் ரெட் லைட் ஏரியாவில் உள்ள பெண்களுக்காக டானாக மாறிய கங்குபாயின் வாழ்க்கைக்கதை என்பதால் இது மிகப்பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்த்திருந்தனர் ஆனால் இந்த படம் 60 கோடி நஷ்டத்தையே கொடுத்தது.

ஜெர்சி: 2019 இல் தெலுங்கில் வெளியான ஜெர்சி படத்தை பெயரை கூட மாற்றாமல் 2022 இல் ஹிந்தியில் ரீமேக் செய்தனர். இந்த படத்தில் ஷாகித் கபூர் நடித்துள்ளார். 100 கோடியில் வெளியான இந்த படத்தின் மொத்த வசூல் 18.8 கோடி மட்டுமே.

தக்காட்: கடந்த மே மாதம் கங்கனா ரனாவத் நடிப்பில் வந்த இந்த திரைப்படம் ஒரு ஆக்சன் படம் ஆகும். 85 கோடியில் உருவான இந்த திரைப்படத்தின் மொத வசூல் 2 கோடி மட்டுமே. இதே போன்றே இந்த ஆண்டில் வெளியான ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ், சபாஷ் மித்து, குதா ஹபிஸ் , ஓம், நிகம்மா, ஜன்ஹித் மே ஜாரி, ஜெயேஷ்பாய், ரன்வே 34, ஹீரோபண்டி 2, பச்சன் பாண்டே, அட்டாக், ஜிஹூன்ட் உள்ளிட்ட மொத்த படங்களும் தோல்வியை தான் தழுவி உள்ளது.

இந்த ஆண்டு வெளியான 26 படங்களில் 25 படங்கள் இந்தி திரையுலகமே அதிர்ச்சியடையும் அளவிற்கு படுதோல்வியை சந்தித்தது. எனினும் நல்ல படங்களுக்கு எப்போதும் ஆதரவு உண்டு என இந்த திரையுலக ரசிகர்கள் நிரூபித்த படம் தான் தி காஷ்மீர் ஃபைல்ஸ்.

 தி காஷ்மீர் ஃபைல்ஸ்: 80 களின் பிற்பகுதியில், 90 களின் நடுவே வாழ்ந்த காஷ்மீர் பண்டிட்களின் வாழ்க்கையே விளக்கியது இந்த திரைப்படம். ஆதரவுகளும் எதிர்ப்புகளும் மாறி மாறி இருந்தாலும் 14 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 251 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி அடைந்தது. வெளியான 26 படங்களில் 25 படங்கள் படுதோல்வியும், 1 படம் மட்டுமே வெற்றி அடைந்தது பாலிவுட் மிக மோசமான நிலையில் உள்ளதை உணர்த்துகிறது.

- Advertisement -

Trending News