மலையாளத்தை விட மோசமாய் பூஜா ஹெக்டேவுக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்.. பீஸ்ட் நாயகிக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குனர்

Pooja Hegde: மலையாள சினிமாவில் மோகன்லால், இயக்குனர் சித்திக் போன்ற பல பிரபலங்களின் மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வரும் நிலையில் தமிழ் பிரபலங்களின் பெயரும் அடிப்பட தொடங்கி இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் குறித்து புகார் கொடுத்தார்கள்.

இது குறித்து நடிகை ஊர்வசி, பிக் பாஸ் நடிகை சனம் செட்டி போன்ற பலர் குரல் கொடுத்து வந்தனர். இந்த சூழலில் பூஜா ஹெக்டேக்கு தமிழ் சினிமாவில் இதே போன்ற டார்ச்சர் நடந்ததாக வலைப்பேச்சு அந்தணன் ஒரு யூடியூப் சேனல் கூறியிருக்கிறார். அதுவும் பிரபல இயக்குனரால் அவர் சித்திரவதை அனுபவித்ததாக சொல்லி உள்ளார்.

இப்போது டாப் 10 நடிகைகளில் முக்கிய இடத்தில் பூஜா ஹெக்டே இருக்கிறார். குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களில் மட்டும் தான் நடித்து வருகிறார். ஆனால் தமிழில் அவரது முதல் படத்திலிருந்து மோசமான அனுபவத்தை சந்தித்துள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

பூஜா ஹெக்டேக்கு கொடுக்கப்பட்ட டார்ச்சர்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் தான் பூஜா ஹெக்டே அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் நடித்த போது மிஷ்கின் பூஜா ஹெக்டேக்கு டார்ச்சர் கொடுத்ததாக அந்தணன் கூறியிருந்தார். இதனால் படத்தில் க்ளோசப் காட்சிகள் வைக்காமல், கதாநாயகிக்கு பெரிய அளவில் காட்சி கொடுக்காமல் மிஷ்கின் அளக்களித்தாராம்.

இதனால் தான் தமிழ் சினிமாவே வேண்டாம் என்று பூஜா ஹெக்டே தெலுங்கு பக்கம் சென்று முன்னணி நடிகையாக வளம் வந்தார். அதன் பிறகு தான் முன்னணி நடிகரான விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிக்க வாய்ப்பு அவரை தேடி வந்தது.

இவ்வாறு தமிழில் என்ன தான் டார்ச்சரை அனுபவித்தாலும் பூஜா ஹெக்டே போன்று தன்னம்பிக்கையை இழக்காத சில நடிகைகள் அக்கட தேசத்தில் சென்று ஜொலிக்கிறார்கள். இதன் மூலம் தமிழ் சினிமாவிலும் பல நடிகைகள் மோசமான அனுபவத்தை சந்தித்து உள்ளதாக அந்தணன் கூறியிருந்தார்.

கிடுகிடுத்து போன மலையாள சினிமா

Next Story

- Advertisement -